கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது


 7 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கார் பந்தய வீரர் 4 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த 35 வயதான கார் பந்தய வீரர் பாலவிஜய் என்பவரே கைதாகியுள்ளார்.

இவரது தந்தை பாலசுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான பாலவிஜய் பிரபலமான கார் பந்தயவீரர். 7 முறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

கார் பந்தயத்தில் ஈடுபட தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, அதில் இருந்து மீள்வதற்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார் பாலவிஜய்.

போலியான முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை கொடுத்து மொத்தம் 5 வங்கி அதிகாரிகளை ஏமாற்றி சுமார் 4 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்பந்தய வீரர் பாலவிஜய் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 6 கார்களையும், குறிப்பிட்ட வங்கி நிர்வாகத்தினரிடம் பொலிசார் ஒப்படைத்து விட்டனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.