மரணமடைந்த காரைநகர் வாசிக்கு தொற்று இல்லை!


 காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அருளையா ஜனகராசா (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Blogger இயக்குவது.