மது விற்பனையை கட்டுப்படுத்த கோரி மகஜர்!


 கிளிநொச்சி – கண்ணகிபுரம் மேற்கு கிராம மக்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

இன்று (18) காலை, இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்ற குறித்த கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகஜரை கையளித்துள்ளனர்.

தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி, எதிர்கால சந்ததியின் வாழ்விற்கு சுமூகமான சூழலை ஏற்படுத்தி தருமாறு தெரிவித்தே பிரதேச மக்களால் கையொப்பமிடப்பட்டு குறித்த மகஜர் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.