இணைய கல்வியை சகலருக்கும் வழங்க கோரிக்கை!


 அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக்கொடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி, மக்கள் விடுதலை முன்னணியினர் திருகோணமலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தலைமையில், இன்று (18) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் கல்விக்காக இலத்திரனியல் ஊடகங்களில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் இணையக்கல்வியினை இலவசமாய் பெற்றுக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளின் கல்வி முடக்கம் உடனே தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சமூக இடைவெளியைப்பேணி பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Blogger இயக்குவது.