தலையை சுற்ற வைக்கும் வைக்கும் சீனியின் வரி!
இலங்கையில் ஒரு கிலோ சீனிக்கு 50 ரூபா அரசாங்கம் வரி அறவிட்டு வருகிறதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.
இன்று நாட்டில் எங்கும் 85 ரூபாவுக்கு சீனி விற்பனை செய்யப்படுவதில்லை என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதனைக் கூறினார்.
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது போல் இன்று நாட்டில் சீனி விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மோசடியான வர்த்தகர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் முகாமிட்டுள்ளதாகவும் இதனாலேயே பொதுச் சேவைகள் ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை