நடராஜன் சிறப்பிக்க வென்றது இந்தியா!


 சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (04) கன்பெராவில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி ஷஹால் – நடராஜனின் அசத்தலான பந்துவீச்சு துணையுடன் 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் லோகேஸ் ராகுல் 40 பந்துகளில் (51), ரவீந்திர ஜடேயா 23 பந்துகளில் (44*) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மோசஸ் ஹென்ரிகியூஸ் (22/3), மிச்சல் ஸ்ராக் (34/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் அரோன் பிஞ் (45), டி’அர்சி சோர்ட் (34) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஷ்விந்தர் ஷஹால் (25/3), நடராஜன் (30/3) விக்கெட்களை கைப்பற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.