யாழில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!


 யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

எதிர்பாராத இந்த நிலையினால் அப்பிரதேசத்தில் வாழும் குடும்பங்கள் சிக்கலை எதர்நோக்கியிருந்தனர். வறியகுடும்பத்தை சார்ந்தவர்களால் அவர்களுக்குத் தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் SOLVE நிறுவனத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

யாழ் மகளிர் முன்னனியின் ஊடாக திருமதி தயானி அருண்சித்தார்தனால் இத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய SOLVE நிறுவனர் திருமதி பவதாரணி ராஜசிங்கம் அவர்களுக்கு தேவையான, உலர்உணவு ,நுளம்புவலை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வந்தார். அதனடிப்படையில் இன்றைய தினம் SOLVE குழுவினரால் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.