கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் பாதிப்பு!


 யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இருபாலை கிழக்கு மற்றும் இருபாலை தெற்கு பகுதிகளான ஜே/257, ஜே/258 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களில் பலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இருபலை தெற்கு பகுதியால் 8 குடும்பங்களை சேர்ந்த 26 நபர்கள் கிரம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இருபாலை கிழக்கு பகுதியில் 72 குடும்பங்களை சேர்ந்த 252 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ள அதே வேளை பல வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.