மூடப்பட்ட சேவை வழங்கும் நிலையம் நாளை திறப்பு!

 குருநாகல் தலைமை தபால் அலுவலகம் உட்பட குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் நாளை (2) முதல் மீண்டும் திறக்குமாறு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, குருநாகல் தலைமை தபால் நிலையத்தால் நிர்வகிக்கப்படும் துணை அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட கணக்கு அலுவலகம் தவிர குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் நாளை முதல் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும்.

தபால் மா அதிபர் மேலும் கூறுகையில், அனைத்து அலுவலகங்களும் முறையாக கிருமி நீக்கம் செய்யப்படவும், சுகாதாரமான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தங்கள் கடமைகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Blogger இயக்குவது.