நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை!
2021 ஜனவரி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை மீண்டும் சுமூக நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு முன்னர் செயற்படுத்த வேண்டிய ஒழுங்குமுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களின்படி குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்த பின்னர் படிப்படியாக நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவர முடியும்.
சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பது குறித்து தற்போது, தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை