பாடசாலை ஒன்றில் சுதந்திரமாக புகுந்து விளையாடும் குரங்குகள்!


 இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில், அனைத்து மக்களும் கடும் அச்சத்திற்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கொரோனா அபாய வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் வீதம் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் பாடசாலையில் காணப்படும் சிறுவர் பூங்காவினுள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் புரிவதாக அதிபர்கள் கூறியுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும் பாய்ந்து தொல்லை கொடுப்பதாக தெரியவருகிறது.

அத்துடன், பாடசாலைகளில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் குரங்குகள் சுதந்திரமாக ஊஞ்சல்களில் விளையாடி வருகின்றன.

எனினும், மீண்டும் பாடசாலைகள் சமூக மட்டத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பாடசாலை வளாகத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பது என்பது கேள்விக்குறியே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.