மத்திய அதிவேக வீதியின் 3ம் கட்டம் ஆரம்பம்!


 மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டன.

பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத் தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல கட்டங்களின் கட்டுமானப் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டிருந்தாலும் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் கட்டுமானம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது

தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, அதற்கான கட்டுமானங்களை விரைவாகத் தொடங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.