உடல்களை எரிப்பதா? அறிவித்தது கூட்டமைப்பு!


 “முஸ்லிம் மக்கள் தமது மதத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உடல்களை புதைக்கும் உரிமையை மறுப்பது அடிப்படை உரிமைை மீறலாகும். இது தொடர்பில் அரசு தாமதமின்றி இறுதி முடிவுக்கு வர வேண்டும்”

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று (19) சற்றுமுன் அறிக்கையிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடிய போது ஒருமனதாக இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ நிபுணர்களின் பார்வையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பது தீங்கும் ஏற்படாது எனத் தெரிகிறது. உலகெங்கிலும் பல நாடுகளிலும் உடல் மற்றவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்ற அடிப்படையில் புதைக்கப்படுவதாக தெரிகிறது என்பது சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.