பொலிசாரின் காலில் விழுந்து கதறிய இளைஞன்!
தம்புல்ல பொருளாதார மையத்திற்கு அருகில் பணப்பையை தவறவிட்ட ஒருவரிடம், பொலிசார் பணப்பையை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
தம்புள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் ஜி.யு.விக்ரமசிங்க (35327) தம்புள்ள பொருளாதார மையத்தின் முன் வீதியில் கடமையில் இருந்தபோது, வீதியில் விழுந்து கிடந்த பணப்பையொன்றை கண்டெடுத்தார்.
பொருளாதார மைத்திய நிலையத்தில் செயற்படும் ஒலிபெருக்கிகள் வழியாக பணப்பை கண்டெடுக்கப்பட்ட தகவலை அவர் அறிவித்தார். உரியவர்கள் பொலிஸ் நிலையத்தில் அடையாளத்தை உறுதிசெய்து பணப்பையை பெறுமாறு கூறப்பட்டது.
கம்பஹாவிலிருந்து பொருளாதார மையத்திற்கு காய்கறிகளை வாங்க வந்த லஹிரு சந்தருவும் அவரது தந்தையுமே பணப்பையை தவறவிட்டவர்கள். அவர்கள் பணப்பையைத் தேடி தம்புள்ள பொலிஸ் நிலையம் வந்திருந்தனர்.
பணப்பையில் லஹிரு சந்தருவின் அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், ரூ .30,000 இருந்தது. என்று போலீசார் தெரிவித்தனர்.
கம்பஹாவில் லொக் டவுன் காரணமாக பல வாரங்களாக வர்த்தகம் செய்ய முடியவில்லை என்றும்,பணம் சேகரித்து மரக்கறி கொள்வனவு செய்ய வந்த நிலையில், பணப்பையை தவறவிட்டதாகவும், நம்பிக்கை சிதைந்திருந்த நிலையில் பொலிசாரிடமிருந்து பணப்பை கிடைத்ததாகவும் கூறி, பொலிசாருக்கு நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை