ஊடக நிறுவனம் ஒன்றின் 33 ஊழியர்களுக்கு கொரோனா!


 இலங்கையில் அச்சு ஊடகம் ஒன்றில் கடமையாற்றும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த ஊடக நிறுவனத்தை தனிமைப்படுத்துமாறு சுகாதார துறையினர் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அந்த நிறுவனம் தனிமைப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

குறித்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த நிறுவனத்தை சேர்ந்த பலர் வீடுகளில் இருந்து கடமையாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.