பாண்டியா – ஜடேயா ஜோடியால் மீண்டெழுந்தது இந்தியா!


 சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (02) கன்பெராவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது. ஒருகட்டத்தில் 152 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய போதும் பாண்டியா – ஜடேயா ஜோடி சிறப்பாக ஆடி அணியை தூக்கி நிமிர்த்தினர்.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் ஹார்டிக் பாண்டியா 76 பந்துகளில் (92*), ரவீந்திர ஜடேயா 50 பந்துகளில் (66*), விராட் கோஹ்லி (63) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அஸ்ரொன் அகர் (44/2) விக்கெட்களை வீழ்த்தினார்.

Blogger இயக்குவது.