காலி தபால் அலுவலகம் மூடல்!
கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக காலி பிரதான தபால் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
காலி தபால் அலுவலகத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று நண்பகல் முதல் எடுக்கப்பட்டதாக தென்மாகாண பிரதி தபால் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை