யாழில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது!


 யாழ். வலிகாமம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை காங்கேசன்துறை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வலிகாம் பிரதேசத்தின் மானிப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்தான், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்டிருந்த விசேட நடவடிக்கையில் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மானிப்பாயைச் சேர்ந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரு தொகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.