புரெவி புயலின் தற்போதைய நகர்வு…!


 புரெவி புயல் வலுவிழந்து தற்போது, நாட்டை விட்டு விலகிச் செல்வதால் இதன் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலுக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.