இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!
உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 (ஏ) பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசம்பர் 10ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.
அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் முதலிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்கங்களினதும் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மாநாட்டின்போது தெரிவிக்கப்பட்டது.
நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை