சீனாவிலிருந்து வந்த கொரோனா தடுப்பூசி!


 சீனாவின் சினோவாக் (Sinovac Biotech ) நிறுவனம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி இந்தோனேசியாவுக்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 1.2 மில்லியன் டோஸ் இந்தோனேசியாவுக்கு வந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அரசுக்கு சொந்தமான பயோ பார்மா நிறுவனமும், சீன நிறுவனமான சினோவாக் பயோரெக் நிறுவனமும் கடந்த ஜூலை முதல் ஒப்பந்தம் செய்தது.

இந்தோனேசியா கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட தொற்றுநோய்களின் முன் வரிசையில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் முதல் 3 மில்லியன் டோஸைப் பெறுவர்.

அதன்பிறகு, 18 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் வந்து இறங்கிய இந்த தடுப்பு மருந்தால் தமக்கு இனிமேல் கொரோனாவிலிருந்து பூரண விடுதலைதான் என்று இந்தோனேசிய மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.