தம்மிக்கவின் கொரோனா மருந்துக்கு அனுமதி!
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கானது என கூறப்படும் மருந்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் விதிமுறைக் குழு அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்,
“இந்த மருந்து ஏற்கனவே தேசிய மருத்துவத்தால் விஞ்ஞான ரீதியாக உணவு நிரப்பியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, சுய விருப்பத்தின் பேரில் குறித்த மருந்தை பெற்றுக்கொள்வதை தடுக்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை