ஒரே நாளில் இரு யானைகள் பலி!


 அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று (26) யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. இதன்போது யானை சுட்டுக் கொல்லப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது.

Blogger இயக்குவது.