கொரோனா உறுதியான வீட்டில் கொள்ளை!
வடமராட்சி – பருத்தித்துறை, ஓடைக்கரை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களது வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்
கடந்த மாதம் கொரோனா சிகிச்சைக்காக சென்றிருந்த குறித்த குடும்பத்தினர் இன்று (19) வீடு திரும்பிய போதே தமது வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.
குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டதால் வீட்டில் பயன்படுத்திய பொருட்களில் கொரோனா வைரஸ்கள் காணப்பட்டிருக்காலம் என்பதால், கொரோனா வைரஸ் உயிர்வாழக்கூடிய காலப் பகுதிக்குள் திருடர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களை கொரோனா தொற்றியிருக்கக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை