தப்பியோடிய நபரை பிடித்த மக்கள்!


 யாழ்ப்பாணம் சாவகச்சேரியின் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை அச்சுறுத்தி நகைகள் ஒரு தொகைப் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் கொள்ளையர்கள் நால்வரை கைது செய்துள்ளனர்.

கைது செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுகொண்டிருந்த வேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பொலிஸ் பிடியில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைவிலங்கோடு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து சுமார் ஒரு மணித்தியாலமாக சந்தேகநபரை சாவகச்சேரி டச் வீதிப் பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்களும் பொலிஸாரோடு இணைந்து தேடுதல் நடத்திய போது டச் வீதியில் உள்ள வீடோன்றுக்குள் குறித்த திருடன் ஓடி ஔிந்த போது மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.