விகாரையை விட்டுச் செல்ல நேரிடும் – சுமண தேரர்!
தனக்கு எதிராக தற்போது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமண தேரர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சுகபோகங்களுக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்குகள் தொடரப்படவில்லை எனவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பௌத்த உரிமைகள் மற்றும் தேசிய வளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல எதிர்பார்ப்புடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத்தினர் விகாரைகளுக்கு வழங்கும் தானங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
உயர் மட்டத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாகவே தானம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மங்களராம விகாரைக்கு அருகில் சிங்களவர்கள் எவரும் இல்லை.
விகாரைக்கு தேவையான பாதுகாப்பு மாத்திரமல்லாது தேவையான பலவற்றை இராணுவத்தினரே வழங்கினர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் விகாரையை கைவிட்டு செல்ல நேரிடும் எனவும் அம்பிட்டியே சுமண தேரர் குறிப்பிட்டுள்ளளார்.
கருத்துகள் இல்லை