சமிஞ்சை விளக்கு பொருத்துமாறு கோரிக்கை!


 வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துமாறு பொதுமக்கள் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

குறித்த சுற்று வட்டமானது வடமாகணம் மற்றும் தென் பகுதிகளில் இருந்து வருகை தரும் அனைத்து வாகனங்களும் சந்திக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

இதனால் அதிகமான வாகன நெருக்கடி அதிகரித்த பகுதியாக காணப்படுவதுடன், விபத்துக்களும் இடம்பெற்றுவரும் நிலமை நீடித்து வருகின்றது.
இதனை கருத்தில்க் கொண்டு குறித்த பகுதியில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Blogger இயக்குவது.