கம்பளையில் பெண்ணொருவருக்கு தொற்று!


 கம்பளை கந்தலா மேல் பிரிவு தோட்டத்தில் தனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 46 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொழும்பு களனி பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தநிலையில் , அங்கு கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவருக்கு பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தாயார் இறந்த செய்தி கேட்டதும், சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமல் தனது கணவருடன், வாடகை முச்சக்கர வண்டியில் கம்பளைக்கு வந்தார். இதனையடுத்து தாயாரின் சடலம் நேற்று காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணிற்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

இதேவேளை குறித்த மரணச்சடங்கில் மூன்றிற்கும் அதிகமான தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து தோட்டப் பகுதியை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் தொழிலாளர்கள் நேற்றையதினம் தொழிலுக்கு செல்லவில்லை.

அத்துடன் தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட பெண், புஸல்லாவ நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்றதாக கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பான விபரங்களை திரட்ட சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.