டயர் உற்பத்தி திட்டம்!
ஏற்றுமதி சந்தைக்கான அரை வார்ப்பு ரேடியல் டயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் டயர் உற்பத்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நடவடிக்கையை அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஆரம்பிப்பதற்காக, சீன நிறுவனமொன்றின் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தை முதலீட்டு சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்று வருட காலப்பகுதியில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதன் மொத்த உற்பத்தியில் 80 வீதத்தை ஏற்றுமதி செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரம், நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்வினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை