இட்லி மிளகாய்ப்பொடி - செய்முறை!!

 


தேவையானவை  : செத்தல் மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 1 கப், கடலைப்பருப்பு– 1 கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை :  வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். எள்ளையும் வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு செத்தல் மிளகாயை வறுத்துக் கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடியாக்கி எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.


குறிப்பு  :  காற்றுப்புகாத போத்தலில் போட்டு, கைபடாமல் கரண்டி உபயோகப்படுத்தி பயன்படுத்தினால் இது இரண்டு மாதம்வரை கெடாமல் இருக்கும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.