சொக்லேற் கனவுகள் 5 - கோபிகை!!

 


'டேய்...ஏன்டா...ஏன்

இப்பிடி பறக்கிறாய்?

என்னைக் கொல்லுறதா

முடிவு பண்ணிட்டியா?'

அனுதி கேட்க, அவளை

முன்னாலிருந்த 

கண்ணாடியில் பார்த்தபடி

மௌனம் காத்தான். 


'ஐயோடா....கோபமா 

இருக்கியாடா ஆதி?'

அவள் கேட்க, 

தலையை மட்டும் 

அப்படியும் இப்படியுமாய் 

ஆட்டினான்.  


கோபத்தை போக்கிற வழி

எனக்கு தெரியும்டா....

என்றவள்,

'உனக்கு ஒரு விசயம்

சொல்ல மறந்திட்டன்டா...'

அவள் இழுக்க 

அவன் முறைத்தான். 


'சரி..சரி....முறைக்காத...,

'அந்த மிகமுக்கிய விடயம்

என்னவென்றால், 

எங்கள் சிங்கம் ஆதியின்

கண்ணுக்கினியவளான

கனிகாவுக்கு 

நாளைக்கு பிறந்தநாள்....

டொட்டடொய்ங்........'

என ராகம் பாடினாள். 


சின்னப் புன்னகை ஒன்று

உதட்டிலே மலர,

கைகளால் தலையை வாரி

கழுத்தைத் தேய்த்தான்.....


'அடடா.....நம்ம சிங்கம்

இப்பிடி வெக்கப்படுதே....'

அவள் சொல்லிச் சிரிக்க

அவனுக்குள் மெல்லிய அமைதி....


கனவுகள் தொடரும்


கோபிகை



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.