பிரிட்டனில் பரவும் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் இலங்கையில்..!


பிரித்தானியாவில் தீவிரமடையும் புதிய கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள இரு இலங்கையர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள் என்று கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி தெரிவிக்கின்றது.
06 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் இருவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.
பிரிட்டனுக்கான விமான சேவைகள் இரத்து செய்யவிருந்த திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவர் மற்றும் இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த 04 பேர் உட்பட 06 பேரும் விசேட விடுதியொன்றில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.