கங்கையின் புனிதம்!!

 


இமயமலையில் பல்வேறு வகையான நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. 

அதே மேகங்கள்/அதே மழைப்பொழிவு/அதே பனி

ஆனால் கங்கை நதி மட்டும் எப்படி மாறுபடுகிறது?. .

கங்கை உற்பத்தியாகின்ற இடம் என்று சொல்லப்படுகிற கங்கோத்ரியை எல்லோரும் பார்வையிடலாம்.

ஆனால் உண்மையான கங்கோத்ரி/கங்கையின் பிறப்பிடம்  அதுவல்ல. 

அது உற்பத்தியாகும் இடத்தை நம்முடைய பருவுடலை கொண்டு அங்கே சென்று பார்வையிடமுடியாது.

 உன்னுடைய ஆத்ம உடலை கொண்டு மட்டும் உள்ளே நுழைந்து நீண்ட தூரம் சென்று ஒருவர் தரிசிக்கமுடியும்.

அங்கே தான் இயற்கையான இரசாயன மாற்றம் நிகழ்கிறது.

இந்துக்களின் கோயில்கள் அனைத்துமே நீரை ஆதாரமாக கொண்டவை.

நீண்ட ஆறுகளும் குளங்களும் பசுஞ் சோலைகளும் இருக்குமாறு தான் ஒரு இந்து ஆலயத்தை தீர்மானிக்கிறார்கள்

 ஏனெனில் இந்து ஆலயங்கள் குளிர்ச்சியை ஆதாரமாக கொண்டவை.

 சமணர்களின் ஆலயங்கள் பசுமையில்லா குன்றுகளின் மேல் அமைந்துள்ளன.

 ஏனெனில் சமணர்களின் ஆலயங்கள்

வெப்பத்தை ஆதாரமாக கொண்டவை.

 ஒரு இந்துவின் உடலின் மேல் எந்த துர்நாற்றமும் வீசுவதில்லை. 

ஒரு சமணனின் உடலின் மேல் என்றும் நாற்றம்  அடிக்கும். 

இந்து தினமும் குளிப்பான். சமணன் என்றாவது ஒருநாள் தான் குளிப்பான்.

கங்கை நதி நீரை போலவே தண்ணீரை செயற்கை முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் போராடிப்பார்த்தார்கள் முடியவில்லை. 

யாராவது இரசாயனத்தை கலக்கிறார்களா என்றால் அதுவும் சாத்தியமில்லை. 

கங்கை நதி நீர் முற்றிலுமே ரசாயன தொழிற்சாலையாக இருக்கிறது. 

மற்ற தண்ணீரை ஒரு வாரம் வைத்திருந்தால் நாறிவிடுகிறது.

 ஆனால் கங்கை நதி நீர் எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கிறது. 

எத்தனையோ பிணங்கள் தினமும் வீசப்படுகின்றன . 

அத்தனை பிணங்களின் மூல சரீரத்தையும் தன்னுள் கங்கை கிரகித்துகொள்கிறது. 

பல நாட்கள் மக்காமல் இருக்கும் எலும்புகள் கூட கங்கையில் கரைந்துவிடுகிறது. 

இவ்வளவு அசுத்தத்திற்கு பிறகும் அந்த நீரின் தன்மை மாறாமல் அப்படியே இருக்கிறது. 

உலகம் 70%தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. 

மனித உடலும் 70% தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. 

கடல் நீர் உப்புத்தன்மை மாறாமல் இருக்கிறது. 

மனித உடலிலும் உப்பு தன்மை குறைந்தாலோ அதிகமானாலோ அவன் உடல் பாதிப்புக்குள்ளாகிறது. 

அதனால் தான் இந்துக்கள் தண்ணீரை அடிப்படையாக கொண்டு புனிதத்தலங்களை அமைத்தார்கள்.

 கங்கை நதியின் இருகரைகளிலும் புனிதத்தலங்கள் அமைந்துள்ளதை காணலாம்.

கங்கை நதி நீரில் இரசாயன மூலக்கூறுகளும் ஆன்மீக வளர்ச்சிக்கான மூலக்கூறுகளும் இயற்கையாக அமைந்துள்ளது.

 கங்கையில் குளித்தவுடன் மனித உடலிலுள்ள நீரும் மாற்றமடைகிறது.

 அவனுடைய உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆன்மீக பாதையில் திரும்புகிறது.

  புனிதத்தலத்தில் பிரவேசித்து வணங்குவது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவமாகும்.

 புறத்தை கொண்டு அகத்தை நாடும் மிகச்சிறந்த வழி இதுவாகும். 

அதனால் தான் சிவனின் தலையில் கங்கையை இந்துக்கள் அமைத்து கொண்டார்கள்.

 #Osho


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.