யாரை கலாய்க்கிறார் கீர்த்தி சுரேஷ்!!

 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும், ‘நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ’சாணி காகிதம்’ ஆகிய தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்


இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ‘ராங்தே’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்று இருக்கிறார். நிதின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை வெங்கி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்


இந்த நிலையில் துபாயில் கீர்த்தி சுரேஷ் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதற்கு கேப்ஷனாக ’ஹலோ துபாயா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீதான் பேசுறியா? ஹவ் ஆர் யூ? என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவருடைய டீசர்ட்டில் ’ஹலோ துபாயா? என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன என்பதும் காமெடியான இந்த கேப்ஷனையும் அசத்தலான புகைப் படத்தையும் பார்த்து ரசிகர்கள் ஜாலியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த புகைப்படத்தையும் அவருடைய கேப்ஷனையும் நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் பேர் ஒரு மணி நேரத்தில் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


Blogger இயக்குவது.