இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 62 ஓட்டங்கள் முன்னிலை!


அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, 1 விக்கெட் இழப்புக்கு 9 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா 62 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஆட்டநேர முடிவில் மயாங் அகர்வால் 5 ஓட்டங்களுடனும் பும்ரா ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி 74 ஓட்டங்களையும், அஜிங்கியா ரஹானோ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அவுஸ்ரேலியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 53 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பிரித்வி ஷா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பெட் கம்மின்ஸ் இந்த விக்கெட்டினை வீழ்த்தினார்.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக போட்டியின் மூன்றாவது நாளை இந்தியா அணி நாளை தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.