வாழ்க்கை - கவிதை!!
வாழ்க்கையை வாழத் தெரிந்தவர் எவரோ!
அவரே வெல்கிறார்.
வாழத் தெரியாத
மனிதர் சிலரே
அவனியில் நோகிறார்.
இணைந்து வாழும்
மனிதர்களைப் புரிந்து கொண்டோமெனில்
வாழ்க்கை இன்பமே..
புரிந்து வாழத் தவறினோமெனில்
வாழ்க்கை நரகமே!..
நல்லவர் தீயவர் எவரெனினும்
புரிதல் இல்லையேல்
பிரிதல் நிதர்சனமே..
உறவோ நட்போ..
உதாசீனமின்றிப் பழகுவோம்.
உரிமையோடு வாழ்வினை எதிர்கொள்வோம்.
எதுவுமே நிரந்தரமில்லாத போது
எதற்காக வீண் விவாதம்..
எவராயினும் நட்புடன் நல்குவோம்
எதார்த்த மனதுடன் வாழ்வோம்.
சிலகால வாழ்வினை..
சிந்தனையால் மகிழ்வாக்கிடுவோம்.
சிதிலமில்லா வாழ்க்கை வாழ்வோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை