மாணவன் வகுப்பறையில் மயக்கமுற்ற நிலையில் கொரோனா என கண்டறிவு!


ஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.

இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.