கண்டி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாற்றப்படும்!!


பேராதனை தாவரவியல் பூங்காவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் முக்கிய இடமாக மாற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கண்டி நகரத்திற்கு வெளிநாட்டினரை ஈர்க்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு பயணத்திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.