ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் குணமடைவு!


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து ஆயிரத்து 869 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவே நாளொன்றுக்கு பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) அதிகளவிலான அதாவது 1,520 குணமடைந்தமையே அதிக எண்ணிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 694 ஆக காணப்படுகின்றது.

இதில் 5 ஆயிரத்து 969 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 781 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 290பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.