குழு மோதலில் சிக்கி 15 வயது சிறுவன் சாவு!


 அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தாக்கப்பட்டு 15 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோதலின் போதே இவ்வாறு சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குடும்ப தகராரு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ளதுடன் , இதன்போது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவன் அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடை சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Blogger இயக்குவது.