லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்த யுவதி சடலமாக மீட்பு!


 இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டு சமைலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் தலைமுடி முழுவதும் எரிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் முழுவதும் காயம் இருந்தது.

இதனிடையில் அனிதா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிதா தனது கணவரை கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து அர்விந்த் என்பவரை திருமணம் செய்யாமல் லிவிங் டூ கெதரில் கடந்த 6 ஆண்டுகளாக அனிதா வாழ்ந்து வந்தார்.

அர்விந்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசாரின் சந்தேக பார்வை அரவிந்த் மீது திரும்பியுள்ளது.

அவர் பொலிசில் கூறுகையில், சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு அனிதாவிடம் விடைபெற்று நான் என் வீட்டுக்கு சென்றேன்.

அங்கிருந்து அனிதாவுக்கு போன் செய்த போது வெகுநேரமாக அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து இரவு 10 மணிக்கு அனிதா தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போது உள் பக்கமாக பூட்டிருந்தது.

என்னிடம் இருந்த மற்றொரு சாவியை வைத்து திறந்த போது உள்ளே சமையலறையில் அனிதா சடலமாக கிடந்தார் என கூறியுள்ளார்.

அர்விந்தை பொலிசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் அனிதா சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனிதா குறித்து அவர் சகோதரர் மனோஜ் கூறுகையில், அனிதா 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அவள் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமாக இருக்க விரும்பினாள் என கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.