தனிமைப்படுத்தப்பட்ட வீடு என கூறி கசிப்பு விற்ற கும்பல்!


 தனிமைப்படுத்தப்பட்ட வீடு என அடையாளப்படுத்தி பல நாட்களாக கசிப்பு உற்பத்திசெய்துவந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

”கொரோனா காரணமாக இவ்வீடு தனிமைப்படுத்தலுக்கு” என வீட்டின் வெளியே காகிதம் ஒன்றில் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்ததை அயலிலுள்ளோர் அவதானித்துள்ளனர்.

ஆனாலும் குறித்த வீட்டில் இருந்தவர்கள் கள்ளத்தனமாக வெளியே நடமாடுவதைக் கண்ட அயலவர்கள் பொது சுகாதார பரிசோதகர்களிடம் முறையிட்டுள்ளனர்.

தம்மால் குறித்த வீட்டில் யாருமே தனிமைப்படுத்தப்படவில்லையே என உணர்ந்த மேற்படி சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

அதன்போது அவ்வீட்டில் இருந்த ஒரு கும்பல் கள்ளச் சாராயமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டமை தெரியவந்தது.

குறித்த நபர்களை கைதுசெய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா தனிமைப்படுத்தலினை சாட்டாக வைத்து சமூகத்தில் இவ்வாறான சட்டவிரோத செயல்களும் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.