மாரடைப்பால் போராடும்போது இதைச் செய்தால் போதும்!


 சித்த மருத்துவத்துறையில் பல்வேறுபட்ட முத்திரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரும் துணையாக இருப்பதை கேள்வியுற்றிருப்பீர்கள். அவ்வாறான முத்திரைகளுள் ஒன்றுதான் அபான வாயு முத்திரை.

அபான வாயு என்றால் என்ன?

மனிதர்கள் தினந்தோறும் அதிகாலையிலேயே காலைக்கடன் முடிக்கவேண்டியது மிகவும் அவசியமானது என்று அன்றைய முன்னோர்கள் தொட்டு இன்றைய நவீன மருத்துவ உலகம்வரை வலியுறுத்திவருகிறது.

மனிதர்கள் காலையில் மலங்கழித்தல் என்பது ஒரு உடலியல் ஒழுங்காகும். இந்த ஒழுங்கினை சரியாக பேணிக்கொள்வதுதான் அபான வாயு. இந்த அபான வாயுவின் தூண்டலினால்தான் பிரச்சினைகளின்றிய மலங்கழித்தல் செயன்முறை இடம்பெறுகின்றது.

அபான வாயு அதிகாலை வேளையில் அதிகமாக தொழில்ப்படத் தொடங்கும். அவ்வேளையில் காலைக்கடனை முடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும். இல்லையேல் அபான வாயு வெளியேறி மலம் கெட்டியாக்கப்படும். இதனால் மலச்சிக்கல், மற்றும் வாயு பறிதல், வாயு பிடிப்பு (மூச்சுக்குத்து) போன்ற உபாதைகள் சங்கடப்படுத்து.

இந்த அபான வாயு உடலின் பல்வேறு இயங்கங்களோடும் தொடர்புறுகிறது. இதன் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கே அபான வாயு முத்திரை பிரயோகமாகிறது.

இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகப்பெரிய சஞ்சீவினியாக மரணத்தில் இருந்து மீட்டு வரக்கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார்கள். அதனால் இதற்கு மிருத்யு சஞ்சீவினி முத்திரை என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இதன் நன்மைகள்

கட்டுப்பாடற்ற இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறது.

இதயத்தின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து உயர் ரத்த அழுத்தம் குறைகிறது.

உயர் மற்றும் குறை ரத்த அழுத்தத்தை சமன்படுத்த கூடியது.

தலைவலி, பல்வலி, வயிற்று வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலிகளுக்கு அற்புதமான தீர்வளிக்க கூடியது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்க கூடியது.ஃ சிறுநீர் அடைப்பு நீக்கி சிறுநீரை தங்குதடையில்லாமல் வெளியேற்ற உதவி புரிகிறது

வேர்வை துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி வியர்வையை நன்றாக வெளியேற செய்கிறது.ஃ பெருங்குடலில் தங்கும் வாயுவை வெளியேற்றி மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது.

ஆசனவாய் பிரச்சினைகளுக்கு குறிப்பாக மூலம், பௌத்திரத்திற்கு அற்புதமான தீர்வு அளிக்க கூடிய முத்திரை.

இந்த முத்திரை பயிற்சி செய்வதற்கு நேரம் காலம் உணவு கட்டுப்பாடு போன்ற எந்த விதிமுறைகளும் கிடையாது.

இதயப் பகுதிகளில் அல்லது இதயத்தைச் சுற்றி அசொளகரியங்கள் உணர்ந்தால் உடனடியாக இந்த முத்திரையை செய்யுங்கள், அல்லது செய்யச் சொல்லுங்கள் நிச்சயமாக அந்த நபரின் உயிரை காப்பாற்றும்.

இதய பிரச்சினை உள்ளவர்கள் தினசரி 30 நிமிடங்கள் இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.