பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!


 பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

46 வயதான சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நக்கியதெனிய, படகெத்திய பகுதியில் நேற்று மாலை அவர் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான விதவையே துஷ்பிரயோகத்திற்குள்ளானவர். அவர் சந்தேக நபரின் உறவினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2021 ஜனவரி 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும்போது சந்தேக நபருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் கீழ் பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார்கள் என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.