உலக சுகாதார நிறுவன குழு சீனாவிற்குள் செல்ல தடை!


 கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரிக்கும் ஒரு குழுவின் வருகையை சீனா தடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விஞ்ஞானிகள் ஏற்கனவே தங்கள் சொந்த நாடுகளை விட்டு வுஹானுக்கு சென்றதாகக் கூறியபோது, சீன அதிகாரிகள் நாட்டிற்குள் நுழைய தேவையான அனுமதிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஜெனிவாவில் நேற்று(05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தொிவித்த உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “இந்த ஏற்பாடுகள் தொடர்பில் சீனாவுடன் முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்டன.இந்த செய்தி குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். நான் சீன மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளேன், இந்த பணி உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச அணிக்கு முன்னுரிமை என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன்.” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.