பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடை!


 பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை சமர்ப்பித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடைக்கேள்வி ஒன்றை கேட்டார். மாணவர்களுக்கு புது வருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரையான வகுப்புக்களுக்குரிய பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பமானவுடன், புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.