இரணைமடுவில் 101 பானை வைத்து பொங்கல்!!

 


கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று 101 பானைகளில் பொங்கல் வைப்பட்டது.


இந்த பொங்கல் நிகழ்வு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் நடாத்தப்பட்டுள்ளது. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் வருடந்தோறும் இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆண்டு நிறைவடைந்துள்ளன.


இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது.நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன். மாவட்ட நீர்ப்பாசன பிரதம எந்திரி இராஜகோபு, பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதசந்திரன். விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் அரசகேசரி, கமக்கார அமைப்புகளின் பிரநிதிகள், விவசாயிகள்எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.