அட்டுலுகமவில் இதுவரையில் 1059 பேருக்கு கொரோனா!


 அட்டுலுகம பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவான வீதத்தில் பதிவாகும் காரணத்தினால் குறித்த கிராம சேவகர் பிரிவை திறப்பதற்காக வாய்ப்பு இருக்குமா என்பது தொடர்பில் ஆலோசனை செய்வதாக களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜானக குமார தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் சரியான தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் உள்ளடங்கிய குழு ஒன்று இன்று (15) நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அட்டுலுகம பகுதியில் இதுவரையில் 6000 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 1059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.