வவுனியா மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று!


 வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 291 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று (23.01) இரவு வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16 பேருக்கும்,

யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்த வெளி மாகாணங்களைச் சேர்ந்த 06 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று மட்டும் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 717 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.