நேற்று 8 கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 240 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-
233வது மரணம்
வெலிக்கடை சிறையிலிருந்து 52 வயதான ஆண் கைதி ஒருவர், வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
234வது மரணம்
இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
235வது மரணம்
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
236வது மரணம்
கொழும்பு 12 புதுக்கடை/ வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
237வது மரணம்
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
238வது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
239வது மரணம்
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
240வது மரணம்
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை